பொள்ளாச்சி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் தென்னை நார் தொழிற்சாலை சங்க நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பு

நழுவடைந்து வரும் தென்னை நார் தொழிற்சாலைகளை மேம்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று பாஜக வேட்பாளார் வசந்தராஜன் வாக்குறுதி அளித்தார்.


கோவை: தேசிய ஜனநாயக கூட்டணியில் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளார் வசந்தராஜன் இன்று பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பகுதிகளில் கிராம கிராமமாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார்.



இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் தென்னை நார் தொழிற்சாலை சங்க நிர்வாகிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தென்னை நார் தொழிற்சாலை நிர்வாகிகள் மத்தியில் வாக்கு சேகரித்த வசந்த ராஜன், பல்வேறு காரணங்களால் நழுவடைந்து வரும் தென்னை நார் தொழிற்சாலைகளை மேம்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், தென்னைநார் தொழிற்சாலைகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த தென்னை நார் நகரமாக பொள்ளாச்சி மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,மேலும் பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...