கோவை சிறுவனின் ரூ.1 லட்சம் பரிசு தொகையை மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் வழங்கிய பெற்றோர்

குழந்தை சாய் சித்தார்த் தனது சாதனை மூலம் பெற்ற ஒரு லட்சம் ரூபாயை பாஜகவுக்காக காசோலையாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் சிறுவனின் பெற்றோர் வழங்கினர்.


கோவை: கோவை மாவட்டம் கணபதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்துவருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு இரண்டு வயதில் சாய் சித்தார்த் என்ற குழந்தை உள்ளது. 9 வது மாதம் முதலே குழந்தை சாய் சித்தார்த் சுறுசுறுப்புடன் காணப்பட்டார்.

மணிகண்டன் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வந்ததால் அவர் அறையில் இருந்த மேப் மற்றும் புத்தகங்களுடனே குழந்தை சாய் சித்தார்த் விளையாடி வந்தார். 2 வயதிலேயே உலக நாடுகளின் தேசிய கொடிகளை வைத்து அதற்குரிய நாடுகளின் பெயரை சரியாக கூறிவருகிறார். இந்திய வரைபடத்தை வைத்து அனைத்து மாநிலங்களையும் சரியாக அடையாளம் காட்டுகின்றார்.

உலக வரைபடத்தில் கண்டங்கள் பெயரை சரியாக காண்பித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார். 21.52 வினாடிகளில் 28 இந்திய மாநிலங்களையும், உலகில் உள்ள அனைத்துக் கண்டங்களையும் 11 வினாடிகளில் கண்டறிந்து, உலகின் ஏழு அதிசயங்களை 8.95 வினாடிகளில் கண்டறிந்து, 195 கொடிகளை மிகக் குறுகிய நொடிகளில் கூறி10 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.

இதன் மூலம் தனக்கு கிடைத்த விருதுகளுடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முகாம் அலுவலகத்திற்கு தனது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியுடன் சாய் சித்தார்த் இன்று (ஏப்ரல்.4) வந்தார். அப்போது பூஜை முடித்து வெளியே வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு நெற்றியில் விபூதி இட்டு அவரிடம் ஆசி பெற்றார்.



குழந்தைக்கு சாக்லேட் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சாய் சித்தார்த் மற்றும் அவரது பெற்றோர்கள் குழந்தை சாய் சித்தார்த் தனது சாதனை மூலம் பெற்ற ஒரு லட்சம் ரூபாயை தமிழ்நாடு பாஜகவுக்கு காசோலையாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...