அவிநாசியில் தெலுங்கில் பேசி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாக்கு சேகரிப்பு

கருவலூர் பகுதியில் திறந்த வாகனத்தில் நின்றவாறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெலுங்கில் பேசி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


திருப்பூர்: நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சட்டப்பேரவை தொகுதியை உள்ளடங்கிய கருவலூர், நரியம்பள்ளி புதூர், திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.



முன்னதாக அவிநாசி சட்டத் பேரவை தொகுதிக்குட்பட்ட நரியம்பள்ளி புதூர் பகுதியில் வருகை தந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நரியம்பள்ளிபுதூர் அருகே ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த பெண்கள் வேட்பாளரை வரவேற்றபோது தெலுங்கில் பேசி மத்திய அரசின் திட்டங்களை விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



தொடர்ந்து கருவலூர் பகுதிக்குச் சென்ற எல்.முருகன் திறந்த வாகனத்தில் நின்றவாறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெலுங்கில் பேசி வாக்குகளை சேகரித்தார். இதில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு, இலவச கேஸ் உள்ளிட்ட திட்டங்கள் அனைவரையும் வந்தடைந்ததா என கேட்டு திட்டங்களின் சிறப்புகள் குறித்தும், மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைய வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசி பரப்புரை மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...