பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் அதிமுக, திமுக பரப்புரை - மடத்துக்குளத்தில் பாஜக வேட்பாளர் பேச்சு

முள்ளங்கி வலசு, காரத்தொழுவு, வஞ்சிபுரம், கணியூர், கடத்தூர், ஜோத்தம்பட்டி, சிலநாயக்கன்பட்டி, மலையாண்டிபட்டினம் ஆகிய கிராமங்களில் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முள்ளங்கி வலசு, காரத்தொழுவு, வஞ்சிபுரம், கணியூர், கடத்தூர், ஜோத்தம்பட்டி, சிலநாயக்கன்பட்டி, மலையாண்டிபட்டினம் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தாமரை சின்னத்திற்கு பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.



அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவினர் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் பரப்புறையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்களை தாங்கள் கொண்டு வந்ததாக திமுகவினர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தற்பொழுது பொதுமக்களுக்கு கூலி உயர்வு அதிகப்படுத்தப்பட்டுள்ளது .

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஊராட்சி செயலாளர்கள் மூலம் வழங்கப்பட்ட தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் இனி வருங்காலங்களில் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் வர வைக்கப்படும். எனக்கு வாய்ப்பளித்தால் ஆனைமலை நல்லாறு பாசன திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தப்படும், பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் மத்திய அரசின் பாஸ்போர்ட் சேவை அலுவலகங்கள் அமைக்கப்படும், பொள்ளாச்சியில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரி அலுவலகம் உறுதியாக அமைக்கப்படும், உடுமலை மடத்துக்குளம் தொகுதியில் கரும்பு விவசாயிகளுக்காக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தற்போது நிதி இல்லாமல் அரவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆலைக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் பெற்று ஆலை செயல்படுத்தப்படும், உடுமலை பகுதியில் விவசாய பொருட்களை பாதுகாக்க குளிர் சேமிப்புக் கிடங்கு தொடங்கப்படும் உட்பட பல்வேறு வாக்குறுதிகள் பொதுமக்களிடையே தெரிவித்தார் .

வாக்கு சேகரிப்பின் போது திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுசெயலாளர் வடுகநாதன், மாநில விவசாய அணி செயலாளர் மௌன குருசாமி, கூட்டணி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா. பழனிச்சாமி, உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், குமரலிங்கம் பேரூர் கழகச் செயலாளர் வெங்கட் உட்பட பாஜக, பாமக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...