இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும் சர்வதிகாரத்திற்கும் ஆன தேர்தல் - தாராபுரத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பேட்டி

கச்சத்தீவை பேசும்போது அதற்கு அடுத்த ஒப்பந்தம் ஒன்று உள்ளது. அந்த ஒப்பந்தம் குறித்து பேச ஏன் மறுக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிக்கு இன்று மதியம் வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்,



அப்போது அவர் கூறுகையில் வணக்கம் எங்களுடைய முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தேசத்தின் முகமாக இருக்கின்ற குரலாக இருக்கின்ற தலைவர் ராகுல் காந்தி அவர்கள் வருகின்ற 12ஆம் தேதி சூறாவளி சுற்றுப்பயணம் தமிழ்நாட்டில் மேற்கொள்கிறார்.

ஒரு இடம் தென்மாவட்டத்தில் திருநெல்வேலியில் எங்களுடைய தென் மாவட்ட வேட்பாளர்களை எல்லாம் ஆதரித்து பேசுகிறார். அன்று மாலை கோயம்புத்தூரில் முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களுடன் இணைந்து மிகப் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மாலை உரையாற்ற இருக்கிறார்கள். இது முதற்கட்டம் அதே போன்று எங்களுடைய அன்பு சகோதரி பிரியங்கா காந்தி தமிழ்நாட்டுக்கு அடுத்த ஓரிரு நாட்களில் வர இருக்கிறார்.

அதே போன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகா அர்ஜுன கார்கே வர இருக்கிறார். இந்த தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும் சர்வதிகாரத்திற்கும் ஆன தேர்தல் சர்வதிகாரத்தை வீழ்த்த வேண்டும் என்றால் ஜனநாயகம் வெல்ல வேண்டும். காங்கிரஸ் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, வேளாண்மை குடிமக்கள் விவசாயிகளை பாதுகாப்பது பாஜக கூட்டணி என்றால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஒழிப்பது விவசாயிகள் பாதுகாப்பில்லாமல் புது டெல்லியில தலைநகரத்தில் வருட கணக்கில் போராட்டம் நடத்துவது தற்கொலை செய்து கொள்வது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பது இதுதான் பாஜகவுக்கு உள்ள வித்தியாசம்.

இதுதான் இந்தியா கூட்டணியின் வித்தியாசம் என்று கூறினர். இந்திய அளவில் மோடி பேசுகிறார் தமிழ்நாட்டில் அண்ணாமலை என்பவர் கற்றுக் கொண்டிருக்கிறார். ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லுகிறார் மாற்றுக் கட்சியில் இருந்து மிரட்டி அமலாக்கத்துறை,சிபிஐ, இன்கம் டேக்ஸ், மூலமாக சோதனை என்ற ரைடர் நடத்தி தன்னுடைய கட்சிக்குள் இழுத்து எல்லா வழக்குகளையும் முடித்து வைக்கப்பட்டு இருக்கிறார் அல்லது திரும்ப பெற்றிருக்கிறார் இதுதான் மோடி உடைய ஆட்சி ஸ்டைல்.

ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. எல்லோருக்கும் எதிரான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ளவர்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஏற்றி உண்மை என்றால் என்ன என்று சம்பந்தமில்லாமல் பேசி வருகிறார்கள். உண்மையா என்றால் சம்பந்தமில்லாமல் பேசுகிறார். கச்சத்தீவு என்கிறார். கச்சத்தீவை பேசும்போது அதற்கு அடுத்த ஒப்பந்தம் ஒன்று உள்ளது. அந்த ஒப்பந்தம் குறித்து பேச மறுக்கிறார்.

குறிப்பாக எவ்வளவோ தவறு செய்கிறார் எவ்வளவோ மிரட்டுகிறார். மாநில கட்சிகளை பாஜக இல்லாத மாநிலங்களில் ஆட்சி செய்யும் அரசுகளை கலைப்பதற்கு விலைக்கு வாங்குவதற்கும் அமலாக்கத்துறை, சிபிஐ, ஐ டி போன்ற தன்னிச்சையாக செயல்படும் இயக்கங்களை அனுப்பி அச்சுறுத்துகிறார். வழக்கு போடுகிறார். சிறை பிடிக்கிறார். உச்சபட்சமாக அன்னை இந்திரா காந்தியை பற்றி பேசியதுதான் இந்த தேசத்துடைய மக்கள் அவரை மன்னிக்கப் போவதில்லை.

நாங்கள் இதுவரை சந்தித்த தேர்தலில் 2004 ஆகட்டும் 2009 ஆகட்டும் இதுவரை பிரதமர் வேட்பாளரை அறிவித்தது இல்லை ஏனென்றால் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது யார் பிரதமராக வருவாங்க என்று என்னை பொறுத்தவரை இந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக உரக்கச் சொல்வேன் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...