கோவையில் தேர்தல் பரப்புரை செய்வது குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோரின் வாக்குகளை வீடுகளுக்கே சென்று பதிவு செய்யும் பணிகளை கண்காணிப்பது, வாக்காளர்களை தொடர்ந்து சந்தித்து வாக்கு சேகரிப்பது போன்ற பணிகள் குறித்து திமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட திமுக, பெரியகடைவீதி பகுதி - 1 அலுவலகத்தில், கோவை நாடாளுமன்ற தொகுதி, இந்தியா கூட்டணி திமுகழக‌ வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்ரல்.4) நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரது வாக்குகளை வீடுகளுக்கே சென்று பதிவு செய்யும் பணிகளை தொடங்குவதை‌ கண்காணிப்பது, வாக்காளர்களை தொடர்ந்து சந்தித்து, வாக்கு சேகரிப்பது போன்ற பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.



இந்த நிகழ்வில் தெற்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நாகராஜ், பெரிய கடைவீதி பகுதி-1 செயலாளர் மார்க்கெட் எம்.மனோகரன், பழக்கடை முத்து முருகன், வட்டக் கழகச் செயலாளர்கள் டவுன் பா.ஆனந்த், ப.ப.சிவக்குமார்,சுரேஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...