சோனியா காந்தியை இழிவாக பேசிய பாஜக எச்.ராஜாவைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செய்தியாளர் சந்திப்பின் போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, சோனியா காந்தியை இழிவாகப் பேசியதைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தஞ்சாவூரில் செய்தியாளர் சந்திப்பின் போது தில்லியில் போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்காதது குறித்தும், விவசாயிகளுக்கான மானியங்கள் குறைத்து வழங்கியது குறித்தும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த எச்.ராஜா, ஊடங்கங்கள் தேச விரோதமாக செயல்படுவதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை இழிவுபடுத்தியும் பேசினார். இந்த வீடியோக் காட்சிகள் சமூக வளைதளங்களில் வேகமாக பரவிவருகின்றன. 

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் இத்தகைய இழிவான பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது எச்.ராஜா மன்னிப்பு கேற்கும் வரை தங்களது போராட்டத்தை தொடரப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, எச்.ராஜாவின் உருவப்படத்தையும் எரிக்க முயன்றனர். அப்போது காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தனர். இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...