படியூர் சோதனை சாவடியில் முதல்வர் ஸ்டாலின் படம் பதித்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 4000 டி சர்ட்டுகள் பறிமுதல்

காங்கேயத்தில் இருந்து திருப்பூரை நோக்கி வந்த வாடகை ஆட்டோவில் எடுத்துவரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 4000 டி சர்ட்டுகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் பொதுதேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ரூபாய் 50,000 க்கு மேல் ரொக்க பணம் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லும் நபர்களை கண்காணிக்க தேர்தல் பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காங்கேயம் அருகே படியூர் சோதனைச் சாவடியில் சங்கீதா மண்டல துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காவலர்களுடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காங்கேயத்தில் இருந்து திருப்பூரை நோக்கி வந்த வாடகை ஆட்டோவை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர்.



சோதனையில் சரவணன் என்பவர் வாகனத்தில் உரிய ஆவனங்கள் இல்லாமல் திருப்பூருக்கு கொண்டு சென்ற தமிழ்நாடு அரசு முத்திரை பதித்த முதல்வர் ஸ்டாலின் படம், கலைஞர் படம் பதிக்கப்பட்ட மஞ்சள், கருப்பு நிறம் கொண்டிருந்தது.



மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியம் என்ற எழுத்துக்களும் அச்சிடப்பட்டிருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான 4000 டி - சர்ட்டுகள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் பறக்கும் படையினர் நடத்திய விசாரணையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாடகை ஆட்டோவில் டீசர்ட்கள் வாகனத்தில் வந்தது என்பதும் காங்கேயத்தில் தயாரிக்கப்பட்டு திருப்பூருக்கு கொண்டு செல்வதாகவும் ஆட்டோ ஓட்டுனர் தெரிவித்தார்.



அதனை தொடர்ந்து தேர்தல் பறிமுதல் செய்த 4000 டிஷர்ட்டுகளை காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் காங்கேயம் வட்டாச்சியர் மயில்சாமியிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...