கோவையில் 100 முதல் முறை வாக்காளர்கள் அண்ணாமலைக்கு வாக்களிக்க உள்ளதாக அறிவிப்பு

பாஜக எற்பாடு செய்த நிகழ்வில், உருமாண்டம்பாளையம் பகுதியில் முதல் முறை வாக்களிக்கவுள்ள 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அண்ணாமலைக்கு வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தனர்.


கோவை: கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.



இந்தநிலையில் கோவை உருமாண்டம்பாளைய் பகுதியில் முதல் முறை வாக்காளர்களாக வாக்களிக்கவுள்ள 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடினர்.



அவர்கள் அனைவரும் மோடி மற்றும் அண்ணாமலையில் செயல்பாடு பிடித்திருப்பதாகவும், மத்தியில் மீண்டும் மோடி பிரதமர் ஆக வேண்டி தங்களின் முதல் வாக்குகளை கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலைக்கு செலுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் கல்லூரியில் பயிலும் அனைவரும் மாலை நேரங்களில் தங்கள் கல்லூரி நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளுக்கு சென்று அண்ணாமலைக்காக தன்னார்வளர்களாக செயல்பட்டு வாக்குசேகரிக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை தேசிய வாக்காளர் பேரவை நிர்வாகி உருவை பாலன் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் இந்திரா, மரகதம், சாந்தகுமார், ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...