திமுக பாராளுமன்ற வேட்பாளர்களில் ஒரு சிறுபான்மையினர் கூட இல்லை-கோவையில் வேலுர் இப்ராஹிம்

பாஜக என்றாலே இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ சமூகத்திற்கு எதிரான கட்சி என்ற போலிபிம்பம் இந்த தேர்தலில் கிழிக்கப்பட்டிருக்கிறது என்று பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலுர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்ற சம்பவத்தில், கைது செய்யபட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் இருவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று (ஏப்ரல்.04) சந்திக்க பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலுர் இப்ராஹிம் கோவை மத்திய சிறைச்சாலைக்கு வந்தார். மேலும் சிறையில் அவர்களை சந்தித்து இச்சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்களோடு இணைந்து பாஜகவிற்கு, வாக்களிக்ககோரி 7 பாராளுமன்றங்களில் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம். பாஜக என்றாலே இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ சமூகத்திற்கு எதிரான கட்சி என்ற போலிபிம்பம் இந்த தேர்தலில் கிழிக்கப்பட்டிருக்கிறது.

சிறுபான்மை சமூகத்தின் காவலனாக வேடம் போடும் ஸ்டாலின் 21 திமுக பாராளுமன்ற வேட்பாளர்களை அறிவித்தார். அதில் சிறுபான்மையினர் ஒருவரும் கிடையாது. ஆனால் பாஜகவில் பால் கனகராஜ் என்ற ஒரு கிறிஸ்துவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஒரு இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவருக்கு வாய்ப்பு அளித்திருக்கிறோம். சிறுபான்மை சமூகத்தை அச்சமுட்டி, திமுக அதிமுக வளரவிடாமல் வைத்துள்ளனர். இஸ்லாமியருக்காக பாஜகவை எதிர்க்கிறோம் என சொல்லும் திமுக, அதிமுக, சிறுபான்மையினர் முன்னேற்றம் குறித்து ஒன்றும் செய்யவில்லை. ஒரு ஸ்டார் பேச்சாளரும் சிறுபான்மையினர் இல்லை. ஆனால் பாஜக தன்னை ஸ்டார் பேச்சாளராக முன்னிலைப்படுத்தியுள்ளது என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...