குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு கவுண்டச்சிபுதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

உடனடியாக தண்ணீர் கிடைக்க தீர்வு காணும் வரை ஊராட்சி மன்ற அலுவலகத்தை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என கூறி மாருதி நகர் பகுதி மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மாருதி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாருதி நகர் பகுதியில் குடிநீர், தெரு விளக்கு, மின்சார வசதி மற்றும் சாக்கடை வசதிகள் சரிவர செய்து தராததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவுண்டச்சிபுதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும் கோடை காலம் என்பதால் குடிநீர் இரண்டு மற்றும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆழ்துளை கிணறுகளில் பழுதாகும் மின்மோட்டார் களை சரி செய்து மீண்டும் இயக்கி வருகின்றனர். எனவே புதிய மின் மோட்டார்களை அமைத்து சீராக தண்ணீர் வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் உடனடியாக தண்ணீர் கிடைக்க தீர்வு காணும் வரை ஊராட்சி மன்ற அலுவலகத்தை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...