சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடன் இணைந்து ஆனைமலை பகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் வாக்கு சேகரிப்பு

அதிமுக ஆட்சியில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டம் ஆகியவற்றை நிறுத்தி வைத்து திமுக அரசு மக்களை வஞ்சித்து வருகிறது என்று அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடன் இன்று வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம், ஆலங்கடவு, பூச்நாரி, ஆத்து பொள்ளாச்சி ஆகிய கிராமங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அதிமுக வேட்பாளர் சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் கார்த்திகேயன், அதிமுக ஆட்சியில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை நிறுத்தி வைத்து திமுக அரசு மக்களை வஞ்சித்து வருவதாகவும், மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் சரியான வேலையும், கூலியும் தராமல் கூலித் தொழிலாளர்களை திமுக அரசு வஞ்சித்து வருவதாகவும் எனவே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை புறக்கணித்து பாடம் புகுத்த வேண்டும் என்றும் கூறி வாக்கு சேகரித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...