கோவையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து வரும் 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தி எம்பி ஆகியோர் தேர்தல் பரப்புரை செய்யவுள்ளனர்.


கோவை: கோவை, செட்டிபாளையம் L&T பைபாஸ் சாலையில், வருகிற 12-4-2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்பி., இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற தேர்தல்-2024, இந்தியா கூட்டணி திமுக கழக‌ கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி,

தேர்தல் பரப்புரை செய்ய‌ உள்ளார்கள்.



அதையொட்டி, கோவை, செட்டிபாளையம் L&T பைபாஸ் சாலையில், மைதானத்தில் பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட உள்ள இடத்தை, தமிழ்நாடு வீட்டுவசதித்துறை, நகர்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை‌ அமைச்சர் சு.முத்துசாமி இன்று (ஏப்ரல்.5) பார்வையிட்டார்.



உடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், திமுக கழக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல், திமுக கழக நிர்வாகிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...