உடுமலை அருகே ஆண்டியகவுண்டனூரில் பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து- ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்

எந்திரங்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பஞ்சு மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஏற்றுமதிக்கு தயாராக இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரம் கிலோ பஞ்சுகள் எரிந்து நாசமானது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி பகுதியில் செல்வகுமார் என்பவர் கழுவு பஞ்சு தொழிற்சாலை நடத்தி வருகின்றார். இன்று வழக்கம் போல் நூற்பாலை இயங்கிக் கொண்டு இருந்தது. அப்போது எந்திரங்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எழுந்த காரணத்தால் பணி புரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் அலறி எடுத்து ஓட்டம் பிடித்தனர்.



பின்னர் சம்பவத்துக்கு வந்த உடுமலை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி அமைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த 20 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரம் கிலோ பஞ்சுகள் எரிந்து நாசமானது.



இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டவுடன் ஊழியர்கள் வெளியே ஓடிவரும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். உடுமலை அருகே கழிவு பஞ்சு நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...