திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது வழக்கு

சோதனை செய்ய முயன்ற நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகளை வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு நடக்க வைத்து விடுவேன் என மிரட்டியதாக பாஜக வேட்பாளர் முருகானந்தத்தின் மீது குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் முருகானந்தம் நிலை கண்காணிப்பு குழு அதிகாரியை மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் முருகானந்தம் இன்று திருப்பூரில் இருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.

திருப்பூர் மாவட்ட மற்றும் ஈரோடு மாவட்ட எல்லையான குறிஞ்சிபுதூர் பகுதியில் சோதனைச் சாவடி உள்ளது. இச்சோதனை சாவடி வழியாக காரில் வந்த பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.பி. முருகானந்தத்தின் காரை அங்கு பணியில் இருந்த நிலை கண்காணிப்பு குழுவினர் தடுத்து சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.



அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் நிலை கண்காணிப்பு குழுவினர் மரியாதை குறைவாக பேசியதோடு மட்டும்மல்லாமல், நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகளை வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு நடக்க வைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து வாக்கு வாதத்திற்கு இடையே வேட்பாளர் வந்த காரை சோதனை செய்த பிறகு வேட்பாளர் முருகானந்தம் கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்றார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியில் வேட்பாளரான AP.முருகானந்தத்தின் மீது பறக்கும் படை அதிகாரி முருகேசன் அளித்த புகாரின் அடிப்படையில் குன்னத்தூர் போலீசார் தேர்தல் பறக்கும் படையினரை பணிசெய்ய விடாமல் மிரட்டியதாகவும் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...