பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் பிரச்சாரம்

முத்தரையர் சமூக மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அய்யாவிற்கு என்னுடைய சொந்த செலவில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பேன் என்று எல்.முருகன் உறுதியளித்தார்.


நீலகிரி: மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன், நீலகிரி பாராளுமன்றம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எரங்காட்டூர், தொட்டம்பாளையம் மற்றும் பவானிசாகர் நகர் பகுதிகளில் இன்று ஏப்ரல்.5 மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதன்படி பெருந்தலைவர் காமராஜர் அய்யாவின் பெயர் கொண்ட பவானிசாகர் பேருந்து நிலையத்திற்கு, பெயர் மாற்றம் செய்வதற்கான பணிகள் மேற்கொண்டு வரும் ‘போலி திராவிட மாடலின்’ முயற்சிகள் முறியடிக்கப்படும், மீன் வளர்ப்புக்கான திட்டப் பணிகள், மத்திய மீன்வளத்துறை சார்பில் முன்னெடுக்கப்படும் என்ற வாக்குறுதிகளை கொடுத்துள்ளேன்.



மேலும், முத்தரையர் சமூக மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ‘பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்’ அய்யாவிற்கு என்னுடைய சொந்த செலவில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பேன் என்பதை உறுதியளித்துள்ளேன்.

களத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அந்த மாற்றத்தை நம்மால் மட்டுமே தர முடியும். தாமரையின் மலர்ச்சியே, நீலகிரியின் வளர்ச்சி என்று பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...