பொள்ளாச்சி நகர பகுதிகளில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் வாக்கு சேகரிப்பு

பொள்ளாச்சி பகுதியில் மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டுவரப்படும் என்றும், ஆனைமலை-நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் வாக்குறுதி அளித்தார்.


கோவை: தேசிய ஜனநாயக கூட்டணியில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வசந்தராஜன், பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் வீதி வீதியாக தாமரைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



அப்போது பேசிய அவர், தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் வரி உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், பொள்ளாச்சி நகரப் பகுதிக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் இல்லாமல் இருப்பதாக பேசிய வேட்பாளர் வசந்தராஜன், பொள்ளாச்சி பகுதியில் மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டுவரப்படும் என்றும், 35 ஆண்டுகால பிரச்சனையான ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவேன் என்றும் வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...