தாராபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு உறுதி குறித்த கொடி அணிவகுப்பு

தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் தேர்தல் நாளான்று, சட்ட ஒழுங்கு பிரச்சனையின்றி, பாதுகாப்பான முறையில் வாக்களிக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்புக்காவலர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.


திருப்பூர்: வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும் தாராபுரத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. வருகின்ற 19 -ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பல்வேறு விதமாக பலப்படுத்தப்பட்டு வருகின்றது.



இதன் ஒரு பகுதியாக தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் தேர்தல் நாளான்று, சட்ட ஒழுங்கு பிரச்சனையின்றி, பாதுகாப்பான முறையில் வாக்களிக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்புக்காவலர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இப்பேரணியை தாராபுரம் வடக்கு காமராஜபுரம் பகுதியில் இருந்து காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் துவக்கி வைத்தார்.



இதையடுத்து பேரணி, பெரிய கடைவீதி , ஜவுளிக்கடை வீதி பூக்கடைக்காரர் பொள்ளாச்சி சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் மற்றும் அலங்கியம் சாலை வரை பேரணி நடைபெற்றது. இதில் தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர், ஐந்து ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 40 போலீசார் மற்றும் குஜராத் ஆயுத படை போலீசார் என மொத்தம் 100 பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...