கோவை மேட்டுப்பாளையத்தில் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகள் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

ராமச்சந்திரன் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த திலீப் மற்றும் கௌரிசங்கர் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று (ஏப்ரல்.5) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவை, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு மகன் ராமச்சந்திரன்(29). இவரை முன் விரோதம் காரணமாக கொல்ல செய்ய முயன்ற வழக்கில் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திலீப் (19) மற்றும் மருதாச்சலம் மகன் கௌரிசங்கர் (21) ஆகிய இரண்டு பேர் மீது மேட்டுப்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டும், பொது அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்டு வந்த குற்றத்திற்காக இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் திலீப், கௌரிசங்கர் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் திலீப் மற்றும் கௌரிசங்கர் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று (ஏப்ரல்.5) கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...