பெரியநாயக்கன்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு 12 அடி ரோஜா மாலையை கிரேன் மூலம் அணிவித்து வரவேற்பு

பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் உடன் இணைந்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு 12 அடி ரோஜா மாலையை கிரேன் மூலம் அணிவித்து 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர்.



கோவை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ இன்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் ஆதரவு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.



இதில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது சிங்கை ராமச்சந்திரனுக்கு 12 அடி ரோஜா மாலையை கிரேன் மூலம் அணிவித்து 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர்.



அப்போது பேசிய ராமச்சந்திரன் நான் வெளியூர்காரன் இல்லை. உங்கள் ஊர்க்காரன். நடுத்தர குடும்பத்தைச் சேர்தவன். போன் செய்தால் எடுப்பேன் மிஸ்டுகால் இருந்தாலும் உடனே கூப்பிடுவேன். மத்தியில் யார் பிரதமர் ஆனாலும் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் கோவைக்கு தேவைக்குத் தேவையானதை போராடி பெற்று தருவேன் என்றார்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...