கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து!

மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மாநகராட்சி தண்ணீர் வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.


கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 100 வார்டுகளின் குப்பைகள் சேகரிக்கப்படும் வெள்ளலூர் குப்பை கிடங்கில், இன்று மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது. 

கோவை வெள்ளலூர்- செட்டிபாளையம் செல்லும் வழியில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த வெள்ளலூர் குப்பை கிடங்கில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு, தரம் பிரிக்கப்படும்.



இந்த நிலையில் இன்று (ஏப்ரல்.6) மாலை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தரம் பிரிக்கும் இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.



உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மாநகராட்சி தண்ணீர் வண்டிகள் தீயை அணைக்க விரைந்தன.



தற்போது, தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...