ரம்ஜான் மாதத்தில் திருமறை குர்ஆன் வேதம் இறங்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கோவையில் 5000 பேருக்கு மட்டன் பிரியாணி விருந்து

ரம்ஜான் மாதத்தில் 27-ம் நாள் இறைவன் பூமிக்கு திருமறைக் குர்ஆனை இறக்கி வைத்த நாட்களாக கருதி 5000 நபர்களுக்கு மட்டன் பிரியாணி, நெய் சோறு, சிக்கன் கிரேவி ஆகியவை நள்ளிரவில் விருந்து அளிக்கப்பட்டது.


கோவை: கோவை, கோட்டை மேடு ஹதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் பெரிய பள்ளிவாசலில் மற்றும் உக்கடம் கே ஜி லேஅவுட் குடியிருப்போர் நல சங்கம், பல்வேறு பள்ளிவாசல் சார்பில் ரம்ஜான் மாதத்தில் 27-ம் நாள் இறைவன் பூமிக்கு திருமறைக் குர்ஆனை இறக்கி வைத்த நாட்களாக கருதி 5000 நபர்களுக்கு மட்டன் பிரியாணி, நெய் சோறு, சிக்கன் கிரேவி ஆகியவை நள்ளிரவில் விருந்து அளிக்கப்பட்டது.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் ஒரு மாதம் நோன்பு (விரதம்) இருந்து இறைவனுக்காக இந்த மாதத்தை கழிப்பார்கள். மேலும் ரமலான் மாதத்தில் இறைவன் திருக்குர் ஆனை இஸ்லாமியர்களுக்கு ஓதுவதற்காக இறக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக இரவில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு பிராத்தனை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.



அனைத்து பள்ளிவாசல்களிலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் அப்பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்கள் குடும்பத்தோடு வந்து கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...