அதிமுக வேட்பாளரை போன்று அமெரிக்காவில் படிக்கவில்லை - தாராபுரத்தில் திமுக வேட்பாளர் பிரகாஷ் பிரச்சாரம்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் மாதம் ஆயிரம் ரூபாய் வராத பெண்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என திமுக வேட்பாளர் பிரகாஷ் வாக்குறுதியளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட இறைச்சி மஸ்தான் நகர், காமராஜபுரம், பூளவாடி பிரிவு, மாரியம்மன் கோவில், ஐந்து சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன் முன்னிலையில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் தாராபுரம் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் மற்றும் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இதுகுறித்து வேட்பாளர் பிரகாஷ் பேசுகையில் நான் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து மொடக்குறிச்சி அரசு பள்ளியில் கல்வி கற்று இவ்வளவு தூரத்திற்கு வந்துள்ளேன். எதிர்க்கட்சி வேட்பாளரான ஆற்றல் அசோக்குமார் அமெரிக்காவில் படித்துவிட்டு அமெரிக்காவில் வாழ்ந்தவர் கிடையாது என்றும் கூறினார்.

மேலும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் மாதம் ஆயிரம் ரூபாய் வராத பெண்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கூறினர். உள்ளாட்சித் துறையில் வழங்கப்படும் அனைத்து திட்டங்களும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...