வெள்ளலூர் குப்பை கிடங்கில் தொடரும் தீயணைப்பு பணிகள்..!

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் சனிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டததையடுத்து 100 -க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 15 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் நேற்று, சனிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இன்றும் தீ எரிந்து வருவதால்,தீயை அணைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணிகளை பார்வையிட்டனர்.

திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து என மொத்தம் 15 தீயணைப்பு வாகனங்கள், கனரக வாகனங்கள், தண்ணீர் லாரிகள், 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், என போர்க்கால அடிப்படையில் தீயை கட்டுக்குள் கொண்டுவரமுயற்சித்து வருகின்றனர்.

மேலும், தீ பரவலை கண்காணிப்பதற்காக,ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 60 ஏக்கரில் தீ பரவி இருப்பதாகவும், நாளை வரை தீயணைப்பு பணி தொடரும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு இது மிகப்பெரிய தீ பரவலாக உள்ளதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், பெரும்பாலான பகுதி கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், புகைமூட்டம் தொடர்வதால், குடியிருப்பு வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர், என்றனர்.

சமீபத்தில், கோவையில் அதிகப்படியான வெப்பம் நிலவி வருவதால், தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டாலும், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...