கோவையில் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி முதல்வரை மாற்றகோரி மாணவர்கள் 5-வது நாளாக போராட்டம்


கோவையில் மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி முதல்வரை மாற்றகோரி அக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 5-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து, துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அவினாசி சாலை பீளமேடு அருகே மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கீழ் சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளிடம்,  அக்கல்லூரியின் பாதுகாப்பு அலுவலர் கலைச்செல்வன் என்பவர் ஆபாச வார்த்தைகளை பேசுவதாகவும், இதனை தட்டி கேட்க வேண்டிய கல்லூரி முதல்வர் பெருமாள்சாமி, மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும் குற்றம்சாட்டி, மாணவ மாணவியர் கடந்த 4 நாட்களாக வகுப்புகள் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரி முதல்வர் மற்றும் பாதுகாப்பு அலுவலர் மீது ஏற்கனவே கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி 5-வது நாளாக  இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், கல்லூரி வளாகத்திலேயே துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக கல்லூரி முதல்வர் மற்றும் பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத்திய அரசின் செயல்பாட்டின் கீழ் இயங்கும் இக்கல்லூரியில் போதிய திறமை வாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆய்வக வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்கள் தெரிவித்தனர். மேலும், நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...