உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கோவை மருத்துவக்கல்லூரியில் மாரத்தான் போட்டி - 800 பேர் பங்கேற்பு

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற ஒரு மருத்துவ மாணவன் மற்றும் மாணவிக்கு தலா ரூ.5000 பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


கோவை: உலக சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி ஒரு நோக்கத்தை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் தனது 75 ஆவது ஆண்டு முடிவை கொண்டாடும் வேளையில், நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் "எனது ஆரோக்கியம், எனது உரிமை" என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சமூக நலன் மற்றும் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், 2.5/5 கிமீ தூர மாரத்தான் நிகழ்வான Healcathon 2024 ஐ பெருமையுடன் தொடங்கியுள்ளது. இதன் மூலம் நல்வாழ்வை மேம்படுத்துவதே இதன் நோக்கம். இன்று அதிகாலை 5 மணி அளவில் தொடங்கிய Healcathon 2024 நிகழ்வில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவ மாணவர்கள், ஆசிரியர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் காவல் துறை ஓட்டப்பந்தய வீரர்கள் என சுமார் 800 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு, கோவை மருத்துவக் கல்லூரி, அவிநாசி ரோடு வளாகத்தில் தொடங்கியது.



கோவை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ. நிர்மலா எம்.எஸ்., டி.ஜி.ஓ., இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, காலை 5.30 மணிக்கு கோவை மருத்துவக் கல்லூரி-கோடீசியா-தண்ணீர்பந்தல் சாலை-டைடல் பார்க் வரை 5 கிமீ தூரத்தை உள்ளடக்கிய மாரத்தான் போட்டியை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.



வாழ்க்கை முறை சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்துவதில் உடற்பயிற்சியின் முக்கிய பங்கையும் அவரது உத்வேகமூட்டும் வார்த்தைகள் வலியுறுத்தின. மேலும், சமூக நலனை மேம்படுத்துவதிலும், தனிநபர்களிடையே ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் Healcathon போன்ற முயற்சிகளின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். சமூக மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் காளிதாஸ் P. தலைமையில் Healcathon 2024 நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெற்றது. இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த அயராது உழைத்த அனைத்து பங்கேற்பாளர்கள், காவல் துறை ஆணையர், தன்னார்வலர்கள் மற்றும் நிதியுதவி வழங்கியோருக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

கல்லூரிக்குள் மட்டுமல்லாமல், சமூகத்திலும் ஆரோக்கியக் கல்வியையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதில் துறை உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.



மாரத்தான் போட்டி முடிந்ததும், கலந்து கொண்டவர்களுக்கு பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற ஒரு மருத்துவ மாணவன் மற்றும் மாணவிக்கு தலா ரூ.5000 பரிசு வழங்கி பாராட்டு விழா கொண்டாடப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...