ஓட்டுக்கு பணம் வாங்காதீர் என்பதை வலியுறுத்தி சூரிய ஒளி மூலம் விழிப்புணர்வு ஓவியம் வரைந்த கோவை கலைஞர் ராஜா

ஓவியத்தில் தூண்டில் முனையில் பணத்தின் குறியீட்டையும், அதனை நோக்கி மனிதர் வருவது போன்றும் ஓவியத்தை வரைந்துள்ளார். மீனானது புழுவிற்கு ஆசைப்பட்டு தூண்டிலில் மாட்டி கொள்வது போல், தேர்தல் நேரத்தில் கிடைக்கின்ற பணத்தின் மீது ஆசைப்பட்டு எதிர்கால நலனை இழப்பதை வலியுறுத்துவதாக ராஜா தெரிவித்தார்.


கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வெற்றி பெற வேண்டிய முனைப்புடன் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே சமயம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் பல்வேறு இடங்களில் வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதனை தடுப்பதற்கும் தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற கலைஞர் ஓட்டுக்கு பணம் வாங்காதீர் என்பதை வலியுறுத்தும் விதமாக தூண்டில் போட்டு மீன் பிடிப்பதை உதாரணமாய் எடுத்து பூதக்கண்ணாடியை கொண்டு சூரிய ஒளி மூலம் விழிப்புணர்வு ஓவியம் ஒன்றை இன்று (ஏப்ரல்.7) வரைந்துள்ளார்.

அந்த ஓவியத்தில் தூண்டில் முனையில் பணத்தின் குறியீட்டையும் அதனை நோக்கி மனிதர் வருவது போன்றும் ஓவியத்தை வரைந்துள்ளார். மீனானது புழுவிற்கு ஆசைப்பட்டு தூண்டிலில் மாட்டி கொள்வது போல், தேர்தல் நேரத்தில் கிடைக்கின்ற பணத்தின் மீது ஆசைப்பட்டு எதிர்கால நலனை இழப்பதை வலியுறுத்துவதாக UMT ராஜா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...