தாராபுரம் இனாம் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு - பெல்லம்பட்டி கிராமத்தில் விவசாயிகள் போராட்டம்

பெல்லம்பட்டி, சடையபாளையம், மரப்பாளையம் மருதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள், தோட்டங்கள், வாகனங்கள் ஆகியவற்றில் கருப்புக்கொடி கட்டி 3000க்கும் மேற்பட்ட மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இனாம் நிலங்களை கையகப்படுத்துவதைக் கண்டித்து, இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு, மனை உரிமையாளர்கள் இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பெல்லம்பட்டி,கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இனாம் நிலங்களை, இந்து சமய அறநிலையத் துறையும், வக்பு வாரியமும் 12 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை, சட்டவிரோதமாக அபகரிக்கும் பணிகளை செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குண்டடம் ஒன்றியம் பெல்லம்பட்டி, சடைய பாளையம், மரப்பாளையம் மருதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள், தோட்டங்கள், வாகனங்கள் ஆகியவற்றில் கருப்புக்கொடி கட்டி 3000க்கும் மேற்பட்ட மக்கள் தேர்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் விவசாயிகள் மண்ணை வாரி தூவி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பல்வேறு பத்திரங்களின் மூலம் நில உரிமை பெற்ற மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி அழைப்பாணை அனுப்பி, ஆஜர் ஆணை போக்கு செயல்படுத்தப்படுகிறது. மேலும் வழக்கை விசாரிக்கும்போது ஆவணங்களைக் கொடுக்காமலும், பதில் மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கொடுக்காமலும், சட்டவிரோதமாக வீடு, மனை உரிமையாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை இந்து சமய அறநிலை துறை செய்து வருகிறது.



இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் சடைய படையை ஊராட்சிக்கு உட்பட்ட 3000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...