கோவை மாநகர போலீசாரின் எக்ஸ் தளத்தில் நடிகர் அஜித் வீடியோ - சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு

காரில் நடிகர் அஜித் மற்றும் துணை நடிகர், சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காயங்களின்றி தப்பினர். இந்த வீடியோ கிளிப்பை மாநகர போலீசார் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.


கோவை: நடிகர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அந்த படத்தின் மேக்கிங் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த காட்சியில் நடிகர் அஜித் கார் ஓட்டி வரும் போது, கார் விபத்துக்குள்ளாகிறது.

ஆனால் காரில் நடிகர் அஜித் மற்றும் துணை நடிகர், சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காயங்களின்றி தப்பினர். இந்த வீடியோ கிளிப்பை மாநகர போலீசார் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். போலீசார் நேற்று ஏப்ரல்.6 பதிவேற்றம் செய்த இந்த வீடியோவை பல ஆயிரம் பார்வையாளர்களை கடந்து உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...