உடுமலை அருகே அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் ஆண்டு விழா மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி

சைனிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் செழுமையான கலாச்சாரத்தை உள்ளடக்கிய பல்வேறு வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன. 2023-24 கல்வி ஆண்டிற்கான ஒட்டுமொத்தசிறந்த அணிக்கான விருதை பல்லவா அணி வென்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதிநகரில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகின்ற சைனிக் பள்ளி உள்ளது.



இந்த பள்ளியின் 62-வது ஆண்டு விழா மற்றும் இறுதி அணிவகுப்பு விழா ஏப்ரல் 5 மற்றும் 6 ம் தேதி நடைபெற்றது.









5-ம் தேதி பள்ளியின் ஓவல் மைதானத்தில் குதிரை ஏற்றம் பாராசைலிங், சறுக்குதல், தற்காப்புக் கலைகள், யோகா, ஏரோபிக்ஸ், லெசிம் நடனம் மற்றும் சிலம்பம் ஆகிய நிகழ்ச்சிகள் பெற்றோருக்காக காட்சிப்படுத்தப்பட்டன.



அதைத் தொடர்ந்து பள்ளியின் 62-வது வருடம், 12-ம் வகுப்பு மாணவர்களின் பாசிங் அவுட் அணிவகுப்பு மேஜர் ஸ்ரீ ராம்குமார் ட்ரில் சதுக்கத்தில் 6- ம் தேதி காலை நடைபெற்றது.



அணிவகுப்பு மரியாதையை கோயம்புத்தூர் விமானப்படை நிர்வாக கல்லூரியின் கமாண்டன்ட் ஏர் கமடோர் விகாஸ் வாஹி வி.எஸ்.எம் ஏற்றுக் கொண்டார்.

கேடட் கனிஷ் கன்னா அணிவகுப்பு தளபதியாக இருந்தார். கேடட் எஸ் அஸ்வின் மற்றும் கேடட் எஸ்.வி. அகிலன் ஆகியோர் முறையே ஒட்டுமொத்த சிறந்த கேடட் மற்றும் சிறந்த ஒழுக்கதிற்கான கோப்பையை வென்றனர்.



செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், கணிதம், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல், மொழிழியல் மற்றும் கலைகள் பற்றிய கண்காட்சிகள் இரண்டு ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த கண்காட்சியில் அனைத்து மாணவர்களும் மற்றும் பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக பள்ளி வளாகத்தில் புத்தகக் கண்காட்சியும் நடத்தப்பட்டது.



6-ம் தேதி மாலை பள்ளியின் அவ்வை அரங்கத்தில் நடைபெற்ற அமர்க்களம் 2023-24' கலைநிகழ்ச்சியுடன் இரண்டாம் விழா இனிதே நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் செழுமையான கலாச்சாரத்தை உள்ளடக்கிய பல்வேறு வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன. 2023-24 கல்வி ஆண்டிற்கான ஒட்டுமொத்தசிறந்த அணிக்கான ஒட்டுமொத்த விருதை பல்லவா அணி வென்றது.



விருதை தலைமை விருந்தினர் ஏர் கமடோர் விகாஸ் வாஹி வி.எஸ்.எம். பல்லவ அணிக்கு வழங்கினார். இரண்டு நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...