விசைத்தறி, கைத்தறி பிரச்சினைகளுக்கு ஒரே ஆண்டில் நிரந்தரத் தீர்வு காணப்படும் - பல்லடத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை உறுதி

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பாராளுமன்றத் தேர்தலில், 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பல்லடம் தொகுதி, வடுகபாளையம் புதூர், சின்னியகவுண்டம்பாளையம், அனுப்பட்டி, புளியம்பட்டி, காமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை இன்று (ஏப்ரல்.7) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர்,



நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் பாராளுமன்றத் தேர்தலில், 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. இந்தியாவின் ஒரே வலிமையான தலைவராக, நமது பாரதப் பிரதமர் மோடி இருக்கிறார்.

நமது பிரதமரின் பத்தாண்டு கால நல்லாட்சி, ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் இவர்களை மையப்படுத்தி நடந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக, நமது பாரதப் பிரதமர் கொண்டு வந்த திட்டங்களை, இங்கு இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையாகச் செயல்படுத்தாததால், பொதுமக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. தொகுதி குறித்துப் பாராளுமன்றத்தில் பேசக் கூட, இதற்கு முன்பிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவில்லை. உள்ளூர் பிரச்சினைகளான, பல்லடம் போக்குவரத்து நெரிசல், அனுப்பட்டி, கூட்டுறவு வங்கி, கால்நடை மருத்துவமனை அமைத்திட, புளியம்பட்டியில், 50 குடும்பங்களுக்கு, மோடி வீடுகள் மற்றும் நிலப்பட்டா இல்லாத 70 குடும்பத்தினருக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுத்திட, கோவை பாராளுமன்ற இளைஞர்களை, போதைக் கலாச்சாரம், மதுக்கலாச்சாரத்திலிருந்து காத்திட, நீர் மேலாண்மைத் திட்டங்கள் கொண்டு வந்து, ஆனைமலை நல்லாறு திட்டத்தைச் செயற்படுத்திட, பிஏபி கால்வாய் திட்டம் ஆகியவற்றைச் செயற்படுத்திட, நொய்யல், கௌசிகா நதிகளை மீட்டெடுக்க, விசைத்தறி, கைத்தறி பிரச்சினைகளுக்கு, ஒரே ஆண்டில் நிரந்தரத் தீர்வு கொண்டு வந்திட, வீடு இல்லாதவர்களுக்கு மோடி வீடு திட்டத்தில், அடுக்குமாடி வீடுகள் அமைத்துக் கொடுத்திட, நம் குழந்தைகள் அனைவருக்கும், சமமான, உலகத்தரமான கல்வியை, இலவசமாக வழங்கும் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை, கோவை பாராளுமன்றத் தொகுதியில் நான்கு பள்ளிகள் கொண்டு வந்திட, நாம் இம்முறை வாக்களிக்க வேண்டிய சின்னம் தாமரை.



திமுக ஆட்சிக்கு வந்து 33 மாதங்களில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. தற்போது, அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் பாராளுமன்றத் தேர்தலுக்கும், அதே வாக்குறுதிகள் கொடுத்து மக்களைத் தொடர்ந்து ஏமாற்ற நினைக்கிறார்கள். எதிர்கட்சிகள் கூட்டணியில், பிரதமர் வேட்பாளர் யார் என்பதே முடிவு செய்யவில்லை. இவர்கள் எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள்? ஒவ்வொரு வீட்டுக்கும் குழாயில் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட நமது பிரதமர் மோடி இலவசமாகக் கொடுக்கும் திட்டங்களைக் கூட, ஏழை எளிய மக்களிடம் லஞ்சம் வாங்கிச் சுரண்டி வருகிறார்கள். நமது பிரதமர் கொடுப்பதைத் தடுக்கிறார்கள்.

நமது இளைஞர்கள் வலிமையான, வளர்ச்சி பெற்ற நாடு வேண்டும் என்று விரும்புகிறார்கள். நமது பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், நம் மாணவர்கள், தரமான கல்வி, தகுதியான வேலைவாய்ப்பு வேண்டும் என்று விரும்புகிறார்கள். அனைவரின் எண்ணத்தையும் நிறைவேற்றும் ஒரே தலைவராக நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மட்டும்தான் இருக்கிறார். எனவே, நமது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்திட, அடுத்த 25 ஆண்டு காலத்திற்கு, நமது குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமைந்திட, நமது பாரதப் பிரதமர் மோடி நேரடிப் பார்வையில், நமது கோவை பாராளுமன்றத் தொகுதி வளர்ச்சி பெற்றிட, நாம் இம்முறை தாமரை சின்னத்துக்கு வாக்களித்து, அண்ணாமலையாகிய என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி வாக்கு சேகரித்தார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...