கோவையில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக நடனமாடி வாக்கு சேகரித்த டான்ஸ் மாஸ்டர் கலா

சினிமா நடன இயக்குனர் கலா மாஸ்டரை, மானாட மயிலாட, போன்ற டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே பார்த்த பொதுமக்கள் அவர் நேரில் வந்து நடனம் ஆடியதைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.


கோவை: கோவையில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து சினிமா நடன இயக்குனர் கலா மாஸ்டர் செம டான்ஸ் ஆடி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது. அண்ணாமலை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.



அவரை ஆதரித்து, பா.ஜ.க தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.



இந்நிலையில் இன்று கோவை வடவள்ளி அதனை சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில், பிரபல சினிமா நடன இயக்குனர் கலா மாஸ்டர் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



நடனமாடி பொதுமக்களை உற்சாகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கலா மாஸ்டரின் டான்ஸால் உற்சாகம் அடைந்த பா.ஜ.க வினர் நடனம் ஆடினார். சினிமா நடன இயக்குனர் கலா மாஸ்டரை, மானாட மயிலாட, போன்ற டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே பார்த்த பொதுமக்கள் அவர் நேரில் வந்து நடனம் ஆடியதைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர். இன்னும் பிரச்சாரத்திற்கு பத்து நாட்கள் இருக்கின்ற நிலையில் இன்று பிரசாரத்தில் கலா மாஸ்டர் கோவையில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து டான்ஸ் ஆடி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...