இரண்டாவது நாளாக பற்றி எரியும் வெள்ளலூர் குப்பை கிடங்கு - தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறை திணறல்

வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீரென நேற்று மதியம் தீ பரவியது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு துறையினர் மற்றும் 500-க்கும் மேற்பட்ட இதர பணியாளர்கள் தொடர்ந்து போராடியும் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைக்கும் பணிகள் நடந்த போதிலும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டாவது நாளாக தீ தொடர்ந்து எரிகிறது.



கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகம் 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.‌ இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரிக்கும் பணிகளும், குப்பை மூலம் உரம் தயாரிக்கும் பணிகளும் நடக்கிறது. தினமும் சுமார் 1000 டன் குப்பைகள் இங்கே குவிக்கப்பட்டு வருகிறது. சுமார் 25 லட்சம் டன் குப்பை இங்கே 100 ஏக்கருக்கு மேல் குவிந்துள்ளதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக குப்பை தரம் பிரிப்பு பணி முறையாக நடப்பதில்லை.

குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. வெள்ளலூர், போத்தனூர், செட்டிபாளையம், மேட்டூர், கோண வாய்க்கால்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்து காணப்படுகிறது. குப்பைகளினால் இந்த பகுதியில் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குப்பைகளை முறையாக தரம் பிரித்து கொட்ட வேண்டும். குப்பைகளை மண்டல அளவில் குப்பை மாற்று நிலையங்கள் மூலம் தரம் பிரித்து அகற்ற வேண்டும்.

வெள்ளலூர் குப்பை கிடங்குக்கு கொண்டு வரும் குப்பைகளின் அளவை வெகுவாக குறைக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் மூலமாக உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவும் முறையாக பின்பற்றப்படவில்லை.‌ மாறாக குப்பை கிடங்கில் குப்பைகள் தீ பிடித்து எரிவது அடிக்கடி நடக்கிறது.‌ வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீரென நேற்று மதியம் தீ பரவியது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு துறையினர் மற்றும் 500-க்கும் மேற்பட்ட இதர பணியாளர்கள் தொடர்ந்து போராடியும் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைக்கும் பணிகள் நடந்த போதிலும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டாவது நாளாக தீ தொடர்ந்து எரிகிறது. தீப்பிடிக்க என்ன காரணம் என யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

குப்பையில் மீத்தேன் வாயு உற்பத்தியாகி தானாக தீ பிடித்திருக்கலாம். இல்லாவிட்டால் குப்பை தரம் பிரிக்கும் பணியில் உள்ளவர்கள் குப்பை கிடங்கிற்கு சென்று வரும் நபர்கள் மூலமாக தீ வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குப்பை கிடங்கில் தீ பரவாமல் தடுக்க மாநகராட்சி சார்பில் குப்பை கிடங்கு வளாகத்தில் தீயணைப்பு வாகனங்களும் மூன்று போர்வெல்களும் அமைக்கப்பட்டிருந்தது. குப்பைகளை தரம் பிரிக்க ஆண்டுக்கு சுமார் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான ஆட்களும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் எந்த பணியும் முறையாக நடக்கவில்லை. வெள்ளலூர் மாசு மீட்டு குழுவை சேர்ந்தவர்கள் கூறுகையில் ," குப்பை பராமரிக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்த யுபிஎல் நிறுவனம் அதை சரியாக செய்யவில்லை . பயோ மைனிங் என்ற பெயரில் குப்பையை தரம் பிரிக்காமல் பெருந்தொகை பெறப்படுகிறது.

தற்போது பல ஏக்கரில் இரண்டு நாட்களாக குப்பை தீப்பற்றி எரிகிறது. தீயில் சாம்பலான பகுதியை தரம் பிரிக்கும் பணி என கணக்கு காட்டி யுபிஎல் நிறுவனம் உட்பட இரண்டு நிறுவனங்கள் சுமார் 20 கோடி ரூபாய் பெறுவதற்காக சதி செயல் செய்திருக்கலாம் என சந்தேகம் நிலவுகிறது.‌ குப்பை கிடங்கில் பயோ மைனிங் பணிகளுக்காக 10 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டமைப்பு மற்றும் கூடாரம் உருவாக்கப்பட்டது.

இதற்கான ஆண்டு வாடகை மாநகராட்சிக்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும். இந்தத் தொகை கடந்த சில ஆண்டாக வழங்கப்படவில்லை. குப்பை கிடங்கில் குப்பை தரம் பிரிப்பு உள்ளிட்ட எந்த பணிகளும் நடக்காமல் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது. இதையெல்லாம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...