2026ல் எடப்பாடி முதலமைச்சராக வேண்டும் என்பதற்கான ஒரு முன்னோட்ட தேர்தல் - சிங்கை ராமச்சந்திரன்

குடும்ப கட்சியான திமுகவும் வேண்டாம் எனவும் மதவாத கட்சியான பாஜகவும் வேண்டாம் எனவும், மக்கள் கட்சியான அதிமுக மட்டுமே வெற்றி பெற வேண்டும் என தீவிர வாக்கு சேகரிப்பு


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனூரில் அதிமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமாருடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



காலை பாலமலையில் பிரச்சாரத்தை தொடங்கிய ராமச்சந்திரன் கோவனூரில்மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கடைகளில் வாக்கு சேகரித்தார்.



அதனை தொடர்ந்து அங்கு பேசிய அவர், உங்களுக்கு எந்த குறையாக இருந்தாலும் என்னை எளிதில் அணுகலாம். போன் செய்தால் உடனே எடுப்பேன், நான் வெற்றி பெற்றால் நமக்கு தேவையானவற்றை மத்திய அரசிடம் போராடி பெற்றுத் தருவேன்.

உங்களை திடீரென கம்ப்யூட்டர் வேலை செய்யச் சொன்னால் செய்ய முடியுமா, அதே போல் நமக்கு என்ன தொழில் வருமோ அதை தான் செய்ய முடியும். எனவே, இந்த பகுதியில் வாழ்வாதாரமான செங்கல் தொழிலை மீட்க உறுதியாக நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

வருமானம் குறைந்துள்ள இந்த நேரத்தில் பால் விலை, கரண்ட் பில் கட்டணத்தை ஏற்றிவிட்டனர்.விலைவாசியும் உயர்ந்துள்ளது. மோடி வந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை. திமுக வந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.

மக்கள் மனதில் கடந்த மூன்று ஆண்டு காலமாக திமுக அரசு ஒன்றுமே செய்யவில்லை என்ற வெறுப்பு உள்ளது. கொரோனா காலத்தில் அனைவரும் சிரமப்பட்ட நேரத்தில் யாருமே கேட்காமல் ஒரு மாதத்திற்கு தேவையானவற்றை அதிமுக அரசுதான் வழங்கியது.

மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு சில நாட்கள் மட்டுமே செல்லும் நிலை உள்ளது. அதை மாற்றி வருடம் முழுவதும் செல்லும் வகையில் நான் பாராளுமன்ற வேட்பாளர் ஆனவுடன் முயற்சி எடுப்பேன். இதற்கு மாற்றம் வர வேண்டுமென்றால் 2026-ல் எடப்பாடி முதலமைச்சராக வேண்டும். அதற்கு ஒரு முன்னோட்டமாக தான் இந்த தேர்தல்.

இலவச லேப்டாப், இலவச சைக்கிள், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. குடும்ப கட்சியான திமுகவும் வேண்டாம், மேலிடம் மதவாத கட்சியான பாஜகவும் வேண்டாம், மக்கள் கட்சியான அதிமுக மட்டுமே வெற்றி பெறவேண்டும். இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தொடர்ந்து நாயக்கன்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...