வால்பாறையில் மக்களுடன் செல்ஃபி எடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ஈஸ்வரமூர்த்தி..!

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதிகள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக வேட்பாளர் கே ஈஸ்வர மூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வால்பாறையில் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.



குறிப்பாக, தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் வால்பாறை பகுதிக்கு வருவதால் அனைத்து கட்சியினர் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரமூர்த்தி நேற்று காலை வாட்டர்பால், கருமலை, வால்பாறை, வெள்ளமலை, முடீஸ், சோலையார், கன்னி மேடு சோலையார், சோலையாறு அணை, சேக்கள்முடி ஆகிய பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது, திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினராக ஆன பிறகு வால்பாறை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரை சந்திக்கும் அலுவலகம் கட்டி தருவதாக தெரிவித்தார்.



மேலும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் தரம் உயர்த்தவும், வால்பாறை பகுதியில் மாற்று தொழில் கொண்டு வரவும், தொழில் பயிற்சி கல்லூரி கொண்டு வருவதாகவும் வாக்குறுதிகள் வழங்கி மக்களுடன் செல்ஃபி எடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...