கோவை சின்னியம்பாளையம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் தங்க வைர நகைகள் கொள்ளை...!

கோவை சின்னியம்பாளையம் தொட்டிபாளையத்தில், பூட்டி இருந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில், 58 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து பிளம்பர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 58 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சின்னியம்பாளையம் தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி. ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் காங்கயத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று விட்டு, அன்று இரவு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், உடனே உள்ளே சென்று பார்த்தபோது உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது.

பீரோவை சோதனை செய்து பார்த்த போது, அதில் வைக்கப்பட்டிருந்த 58 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 30 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து குமாரசாமி, பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் சென்று சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். வீட்டு கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த 2 கைரேகை பதிவுகளை சேகரித்தனர். மேலும் அங்கு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள், நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...