திமுக, அதிமுக, இடையே கள்ளக் கூட்டணி உள்ளது-கோவையில் டிடிவி. தினகரன் பிரச்சாரம்..!

கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரான அண்ணாமலையை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஏப்ரல்.8)  ராமநாதபுரம், 80 அடி சாலையில்  பிரச்சாரம் மேற்கொண்டார்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் அவர்களது கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன்படி, இன்று கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில், அமமுக பொதுச்செயலாளர், டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டினார். 

பிரதமர் மோடிக்கு இணையான வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை. கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலையை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தேர்தல் பரப்புரையில் பேசினார். 



கூட்டத்தில் பேசிய அவர், மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வந்தால் தான் நாட்டிற்கு பாதுகாப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் தற்பொழுது ஆட்சி செய்யும் தீய சக்தி,திமுக.வை வீழ்த்த வேண்டும்.

தமிழ்நாட்டில் மாபெரும் கூட்டணி அமைந்துள்ளது. பல்வேறு கூட்டணி கட்சிகள் அமைப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. நாங்கள் தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான கட்சி என்று கூறும் சேலத்து சிங்கம் எடப்பாடி பழனிச்சாமி ஏன் போட்டியிடவில்லை..? 

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமியும் யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா? எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு பயம். 

தங்கள் மீது வழக்கு எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி தி.மு.க.,விற்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறார். திமுக, அதிமுக, இடையே கள்ளக் கூட்டணி உள்ளது.

திமுகவினர் மக்களை ஏமாற்றி ஆட்சி அமைந்து விட்டார்கள். விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைத்து துறையும் இந்த ஆட்சி ஏமாற்றி வருகிறது.

பிரதமர் மோடிக்கு இணையான வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை. கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலையை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தேர்தல் பரப்புரையில் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...