திமுகவை சேர்ந்த பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் செல்கிறது - திருப்பூரில் ஜி.கே.வாசன் பேச்சு

திருப்பூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களுடைய பிரச்சினைகளை இதுவரை சரியாக பிரதிபலிக்கவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் முருகானந்தனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் திருப்பூரில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசியவர், தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறையினர் நிறைந்த திருப்பூரில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளது. திருப்பூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களுடைய பிரச்சினைகளை இதுவரை சரியாக பிரதிபலிக்கவில்லை. மக்களை சந்திக்கவே இல்லை. எனவே நல்லவர்களை அடையாளம் கண்டு வாக்களிப்பதோடு அவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பத்து வருட கால பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

பிரதமரின் இந்த சாதனைகளே வருங்கால பாராளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு அடித்தளம். 100% திட்டங்களை திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு கொண்டு வந்து திருப்பூர் தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றுவதற்கு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும். மக்கள் விரோத திமுக அரசின் பொய் பிரச்சாரத்தை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.தொடர்ந்து பொய் பிரச்சாரங்களை கூறிக்கொண்டு மக்களை அலைக்கழித்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே இந்த தேர்தலில் உங்கள் வாக்கின் மூலம் உங்களை ஏமாற்றியவர்களை ஏமாளியாக வேண்டும் என்றும் கூறியவர். மத்திய அரசின் மகளிர் திட்டங்களை நரேந்திர மோடி அரசில் மட்டும்தான் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு அதிக திட்டங்களை கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். திமுக அரசை பொறுத்தவரை திமுகவை சேர்ந்த பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் செல்வதாக குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...