பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆதரவு அளிப்பதாக கோவையில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு

கோலார் தங்க வயலில் இருந்து தங்கத்தை கொண்டு வந்து கொட்டினாலும் இந்த் முறை மோடிக்கு தான் கோவை மக்கள் வாக்களிப்பார்கள் என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசினார்.


கோவை: கோவை இடிகரை பகுதியில் பாரதிய ஜனதா கட்சி கோவை பாராளுமன்ற வேட்பாளார் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



அப்போது அவரிடம் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் இந்த தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவளிப்பதாக கடிதம் வழங்கினர். இந்த முறை மாற்றத்தை பார்க்க வேண்டும் என நீங்கள் வீதிக்கு வந்துள்ளீர்கள் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அனைவரும் வந்துள்ளீர்கள். இது போன்ற ஒரு தேர்தல் இந்திய அரசியல் வரலாற்றில் நடந்ததில்லை.

இதற்கு முன் 2014ம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்ற போது பத்து கட்சிகள் ஒன்றிணைந்து மன்மோகன் சிங்கை பிரதமராக தேர்ந்தெடுத்தனர். ஆனால் நாங்கள் யாரும் மன்மோகன் சிங்குக்கு வாக்களிக்கவில்லை.

காங்கிரசின் பத்தாண்டுகள் ஆட்சிகளில் யார் வேண்டுமானலும் என்ன வேணாலும் செய்யலாம் என்ற அளவுக்கு ஊழல் செய்தனர். இன்று 18 வயதில் ஓட்டு போடுபவர்கள் காங்கிரஸ் ஆட்சி முடியும் போது அவர்களுக்கு ஏழு வயது தான் இருந்திருக்கும். எனவே காங்கிரஸ் ஆட்சி எப்படி இருந்தது என்பது அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது நமது கடமை.

இன்று நாட்டில் 142 கோடி மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். மூன்றாவது முறையாக மோடி தான் ஆட்சியில் அமர வேண்டும் என்று. கடந்த 10 ஆண்டு காலமாக மோடி கஷ்டப்பட்டு வேலை செய்துள்ளார். 70 ஆண்டு காலமாக ரத்தத்தை உறிஞ்சி நாட்டை பின்னோக்கி செல்லவைத்தவர்களிடம் இருந்து மோடி காப்பாற்றியுள்ளார்.

விவசாயிகளை முன்னிலைப்படுத்தியும் பெண்களை முன்னிலைப்படுத்தியும் நமது ஆட்சி நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. 2019 பாராளுமன்ற தேர்தல் நாம் கொடுத்த 295 வாக்குறுத்துக்களும் நிறைவேற்றிவிட்டு இங்கு நின்று கொண்டிருக்கிறோம். அதனால்தான் இந்த முறை மீண்டும் மோடி வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர். 33 மாதமாக ஸ்டாலினால் இந்த கோயம்புத்தூர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை, செந்தில் பாலாஜியால் தீர்க்க முடியவில்லை, இப்போது இருக்கும் அமைச்சரால் தீர்க்க முடியவில்லை.

கோவையில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. எந்த சாலையில் சென்றாலும் குண்டும் குழியுமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. முதலமைச்சரால் செய்ய முடியாததை எப்படி ஓட்டு போட்டால் எம்.பி. வந்து செய்து விடுவார் என கூறுகிறார்கள்.

கஞ்சா போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை விடுவிக்க ஒவ்வொரு கிராமங்களையும் விளையாட்டு மைதானம் உருவாக்கப்படும் என்கிறோம். திமுக கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவேன் என்கிறார். 4 ஆயிரம் கோடி செலவாகும் அதை கோவை மக்களுக்கு கொடுத்தால் சாலைகளை போடலாம் குடிநீர் வசதி ஏற்படுத்தலாம். இரண்டு விடயத்தில் உறுதியாக இருக்ககிறேன். ஒன்று ஊழல் பெருச்சாளிகளை வேட்டையாட வேண்டும்.

கோலார் தங்க வயலில் இருந்து தங்கத்தை கொண்டு வந்து கொட்டினாலும் இந்த் முறை மோடிக்கு தான் கோவை மக்கள் வாக்களிப்பார்கள். இப்பொழுது மாற்றம் இல்லை என்றால் எப்பொழுதும் மாற்றம் இல்லை என்றார். இதனிடையே தமிழக விவசாயிகள் சங்கத்தினர் பாரதிய ஜனதா கட்சிக்கு 2024 ஆம் தேர்தலில் ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கினர்.



மேலும் இந்து முன்ணணியினர் வடமாநிலத்தவரின் தலைப்பாகை மற்றும் வாள் பரிசளித்தனர்.



பூரண கும்ப மரியாதை வழங்கி தாமரை மாலை, கிரீடம் மற்றும் மிகப்பெரிய மலர் மாலை அணிவித்து வரவேற்றனர். பேசி முடித்து கீழே இறங்கிய அண்ணாமலையை விவசாய சங்கத்தினர் சந்தித்த முயன்ற போது கூட்ட நெரிசலில் சிக்கிய விவசாய சங்கத்தினரை அண்ணாமலை அருகில் அழைத்து தண்ணீர் பாட்டில் கொடுத்து கட்டிப்பிடித்து ஆசுவாசப்படுத்தினார்.

இந்த பரப்புரையின்போது அண்ணாமலை பார்க்க இடையர் பகுதியைச் சேர்ந்த யுவஸ்ரீ என்ற மூன்றரை வயது குழந்தை நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்து. அண்ணாமலையை பார்க்க முடியாததால் அழுது கொண்டே இருந்தது. மேலும் அண்ணாமலை தான் ஜெயிப்பார் என்று கூறி சிரித்தது. முன்னதாக அண்ணாமலையை வரவேற்க காத்திருந்த மக்களிடையே இளைஞர் ஒருவர் அணணாமலை குறித்து ராப் பாடல் பாடி அனைவரையும் கவர்ந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...