திமுக மக்களை பிரித்தாலும் முயற்சியில் இறங்கியுள்ளது – திருப்பூரில் நடிகை நமீதா பேட்டி

காட்டில் யானையை எதிர்க்க சிறு சிறு மிருகங்கள் எவ்வாறு ஒன்று சேருமோ அது போல இந்தியா கூட்டணியில் கட்சிகள் சேர்ந்துள்ளது. இருப்பினும் அவர்களால் மோடி என்னும் பெரும் மனிதரை தோற்கடிக்க முடியாது என்று நடிகை நமீதா தெரிவித்தார்.


திருப்பூர்: நீலகிரி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நேற்றைய தினம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட நடிகை நமீதா இன்று திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்குச் சென்று மத்திய அரசின் திட்டங்களால் பயன் அடைந்த பயனாளிகளை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வரும் வீட்டிற்குச் சென்ற அவர், வீட்டில் உள்ள வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டு அறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் இதுவரை ஆண்ட கட்சிகளை யாராலும் மக்களுக்கு வீடு கொடுத்துள்ளார்களா? மத்திய அரசு ஒவ்வொரு தனி நபருக்கும் இந்திய முழுவதும் வீடு கொடுத்துள்ளது. வீடு மட்டுமல்லாமல் குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளது.



திமுக 243 தொகுதிகளில் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டுள்ளதா? ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை கேட்டுள்ளார். திமுக மக்களை பிரித்தாலும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால் அவர்கள் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. காட்டில் யானையை எதிர்க்க சிறு சிறு மிருகங்கள் எவ்வாறு ஒன்று சேருமோ அது போல இந்தியா கூட்டணியில் கட்சிகள் சேர்ந்துள்ளது. இருப்பினும் அவர்களால் மோடி என்னும் பெரும் மனிதரை தோற்கடிக்க முடியாது.‌ விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி. திறமையான போட்டியாளர் உருவாவதாக நினைக்கிறோம். கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று நல்ல ஒரு நடவடிக்கையை மேற்கொள்வார் என தெரிவித்தார். நிகழ்வின் போது பாஜகவின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். குடியிருப்பு பகுதிக்கு வந்த நமீதாவுடன் குடியிருப்பு வாசிகள் போட்டோ எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...