பொள்ளாச்சியில் அதிமுக பிரச்சார பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டம்

திமுக தூண்டுதலின் பெயரில் காவல்துறையினர், மேடை அமைக்கும் பணிகளை நிறுத்தி அனுமதி மறுப்பது அநாகரீகமான செயல். நாளை திட்டமிட்டபடி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் என்று சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து நாளை புதன் கிழமை மாலை பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக திருவள்ளுவர் திடலில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பள்ளிவாசல் அமைந்துள்ளதால் நாளை ரமலான் பண்டிகை நடைபெற உள்ள அந்த இடத்தில் பொது மக்களுக்கு இடையூறாக நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கு இன்றைக்கே மேடை அமைக்கும் பணிகள் நடைபெற அனுமதி வழங்கிய காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளை கண்டித்து திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி சேர்ந்தவர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மேடை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியதால் அங்கு சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திரண்ட அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இதே இடத்தில் இரண்டு முறை பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி உள்ளனர். எந்த இடையூறும் இல்லாமல் இங்கே பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் திமுகவினர் தூண்டுதல் பெயரில் காவல்துறையினர், தேர்தல் அதிகாரிகள் மேடை அமைக்கும் பணிகளை நிறுத்தி அனுமதி மறுப்பது அநாகரீகமான செயல். இதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த ஜெயராமன் நாளை திட்டமிட்டபடி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...