கோவை மேட்டுப்பாளையத்தில் பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கோவை விமான நிலையத்திற்கு நாளை மதியம் 1:50க்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து பேச உள்ளார்.


கோவை: பா.ஜ.க.வின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலை மற்றும் நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் L. முருகன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவும் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசவும் நாளை பிரதமர் கோவை வருகிறார்.

இந்த நிகழ்ச்சி நாளை மதியம் 1 மணிக்கு மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி பகுதியில் உள்ள நான்குரோடு சந்திப்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று ஏப்ரல்.9 இதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஹெலிகாப்டர் ஒத்திகைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்க அங்கு ஒரு ஹெலிபேட் உருவாக்கப்பட்டுள்ளது. முதலாவதாக கோவை விமான நிலையத்திற்கு மதியம் 1:50க்கு வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து பேச உள்ளார். அதன் பின்னர் மதியம் 3.30 மணிக்கு திரும்பவும் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து நாக்பூர் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...