திமுக ஆட்சியில் மது மற்றும் கஞ்சா விற்பனை அமோகம் - உடுமலையில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பேச்சு

தன்னை வெற்றி பெற செய்தால் உடுமலை ரயில் நிலையத்தை விரிவுபடுத்துவேன், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க பாடுபடுவேன் என்று பாஜக வேட்பாளர் வசந்தராஜன் உறுதியளித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் ஏரிபாளையம், தலை கொண்ட அம்மன், கோவில் பகுதி, காந்தி சவுக் உட்பட பல்வேறு பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பின்போது பேசிய அவர்,தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில் சிங்கள ராணுவ படைகளால் மீனவர்கள் அதிக அளவு சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்கள். மேலும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் மற்றும் 2ஜி அலைக்கற்றையில் ஊழல் உட்பட பல்வேறு துறைகளில் ஊழல் நிறைந்து காணப்பட்டது.



கடந்த சில வருடங்களுக்கு முன்பு திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் மதுவால் தமிழகத்தில் விதவைகள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு உள்ளது என கனிமொழி அப்போது பரப்புரையில் பேசினார். ஆனால் திமுக ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் தற்பொழுது வீதி வீதியாக கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட போதை பொருட்கள் அனைத்தும் தாராளமாக கிடைக்கின்றது. திமுக ஆட்சிக் காலத்தில் இலவசங்களை மகளிர்களுக்கு கொடுத்துவிட்டு ஏளனமாக பேசி வருகிறார்கள்.எனவே பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் என்னை வெற்றி பெற செய்தால் உடுமலை ரயில் நிலையத்தை விரிவுபடுத்துவேன், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க பாடுபடுவேன், நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வழிவகை செய்வேன் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

வாக்கு சேகரிப்பின் போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் சண்முகவேலு, திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகர தலைவர் கண்ணாயிரம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, ஓபிஸ் அணி அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...