வால்பாறை அருகே உருளிகள் எஸ்டேட் பகுதியில் எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

உங்கள் கணவர் மின்சார துறையில் வேலை செய்துவருவதால், உங்களுக்கு வீடு வழங்க இயலாது நீங்கள் தங்கி இருக்கும் வீட்டை காலி செய்து தர வேண்டும் என்று மாலா என்ற தொழிலாளியிடம் எஸ்டேட் நிர்வாகத்தினர் அடாவடியாக பேசியுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உருளிகள் எஸ்டேட் பகுதி உள்ளது.இங்கு சுமார் 2000 க்கு மேல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு நிறுவனமே வீடு வழங்கி வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.இந்நிலையில் உருளிகள் இரண்டாவது டிவிஷனில் வசித்து வரும் மாலா வயது 47 தனது கணவருடன் எஸ்டேட் குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார். கணவர் மின்சார அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

மாலா எஸ்டேட் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வருவதால் அவர்களுக்கு குடியிருப்பு வழங்கப்பட்டு உள்ளது.நேற்று மதியம் எஸ்டேட் நிர்வாகம் மாலா அவர்களுடைய வீட்டை காலி செய்து தரும்படி வீட்டை பூட்டு போட்டு அடைத்து உள்ளனர். மாலா எஸ்டேட் வேலை முடிந்து வீட்டிற்க்கு வந்து மாலை வந்து பார்க்கும் பொழுது வீட்டு பூட்டப்பட்டுள்ளது.அக்கம் பக்கத்தில் கேட்கும் பொழுது எஸ்டேட் அலுவலர்கள் வந்து வீட்டை பூட்டியதாக தெரிவித்துள்ளனர்.



உடனடியாக எஸ்டேட் நிர்வாகதினரிடம் கேட்கும் போது உங்கள் கணவர் மின்சார துறையில் வேலை செய்து வருகிறார். உங்களுக்கு வீடு வழங்க இயலாது நீங்கள் தங்கி இருக்கும் வீட்டை காலி செய்து தர வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

இதை தொடர்ந்து வீட்டை திறக்க மறுத்த நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் சாலையில் அமர்ந்து போராட்டத்தை ஈடுபட்டனர்.

வால்பாறையில் இருந்து சோலையாறு அணை செல்லும் வழியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்பு இரவு 9 மணி அளவில் தொழிற்சங்க தலைவர் அமீது மற்றும் காவல் துறையினர் பொதுமக்களுடன் சமரசம் பேசி சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் பூட்டிய வீட்டை எஸ்டேட் நிர்வாகம் திறந்து கொடுத்துள்ளனர்.இது சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...