உடுமலையில் சொந்த செலவில் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு

MMS தேர்வில் வெற்றி பெற்ற எட்டாம் வகுப்பு மாணவிகள் லாவண்யா மற்றும் தீபிகா ஆகிய இருவரையும் பள்ளியின் சார்பாக பட்டதாரி ஆசிரியர்கள் ஸ்ரீதேவி மற்றும் இந்துமதி ஆகிய இருவரும் தம் சொந்தச் செலவில் கோவையில் இருந்து சென்னைக்கு விமானப்பயணமாக அழைத்துச் சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசின் வருவாய் வழி, திறன் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கும் NMMS தேர்வு நடைபெற்று வருகிறது. இத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ1000 பெறுவார்கள்.

இத்தேர்வை உடுமலைப்பேட்டை வட்டம் கிளவன்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு எழுதினார்கள். அப்பொழுது மாணவர்களை ஊக்குவித்து பாராட்டும் நிகழ்வாக அப்பள்ளி ஆசிரியர்கள் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களை விமான பயணமாக கோவையிலிருந்து சென்னை அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்திருந்தனர்.



அவ்வாறு வெற்றி பெற்ற எட்டாம் வகுப்பு மாணவிகளான லாவண்யா மற்றும் தீபிகா ஆகிய இரு மாணவிகளை பள்ளியின் சார்பாக பட்டதாரி ஆசிரியர்கள் ஸ்ரீதேவி மற்றும் இந்துமதி ஆகிய இருவரும் தம் சொந்தச் செலவில் சென்னைக்கு விமானப்பயணமாக அழைத்துச் சென்று வந்துள்ளனர். இந்த நிகழ்வு எதிர்வரும் காலங்களில் இத்தேர்வை எழுதும் கிராமப்புற மாணவர்களுக்கு ஊக்குவிப்பதாக இருக்கும் மேலும் பல்வேறு தரப்பினரும் ஆசிரியர்களை பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...