உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா பூச்செரிதலுடன் தொடக்கம்

16-ம் தேதி கம்பம் போடுதல் நிகழ்வும்,19-ம் தேதி மதியம் 1 மணிக்கு தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் கொடியேற்றமும், 2 மணிக்கு பூவோடும் ஆரம்பமாகிறது. 23-ம் தேதி இரவு 10 மணிக்கு பூவோடு நிறைவும், 24-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மாவிளக்கும், மதியம் 3 மணிக்கு மாரியம்மன் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் தொடங்கி உள்ளது. முதல் நிகழ்வாக நேற்று மாலை 5 மணிக்கு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் இருந்து பூக்கூடைகள் மாரியம்மன் கோவிலுக்கு மங்கள வாத்தியம் இசைத்தவாறு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

அதைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள மாரியம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. இதையடுத்து விநாயகர், அஷ்டதிக் நாகர்கள், அஷ்டதிக் தேவதைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பத்திரிக்கை வாசிக்கப்பட்டு முரசு அடித்து நோன்பு சாட்டப்பட்டது. அப்போது ஊர் நலம் பெற, நாடு நலம் பெற அனைவரும் நோய் நொடியின்றி மாரியம்மன் அருள் பெற்று மகிழ்வுடன் வாழ 15 நாள் சாட்டாக நோன்பு சாட்டப்படுகிறது என்று கோவில் வளாகத்தில் மூன்று முறை முரசு அடித்து வலம் வந்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



அடுத்த விழாவாக 16-ம் தேதி கம்பம் போடுதல் நிகழ்வும்,19-ம் தேதி மதியம் 1 மணிக்கு தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் கொடியேற்றமும், 2 மணிக்கு பூவோடு ஆரம்பமாகிறது. 23-ம் தேதி இரவு 10 மணிக்கு பூவோடு நிறைவும், 24-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மாவிளக்கும், மதியம் 3 மணிக்கு மாரியம்மன் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை மாலை 4.15 மணிக்கு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவம், நவத்துர்கா பூஜை, பரிவேட்டையும் குட்டை திடலில் வாண வேடிக்கையும், 27-ம் தேதி கொடி இறக்கம்,மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டு, புஷ்ப பல்லக்குடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவையொட்டி மாரியம்மன் நாள்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் உடுமலை நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ். ஸ்ரீதர், கோவில் செயல் அலுவலர் சி.தீபா உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...