வால்பாறை அருகே நல்லகாத்து எஸ்டேட் இரண்டாவது பிரிவில் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து

தீ விபத்தில் ரங்கநாயகி, மணியம்மாள், ராமலட்சுமி, மங்கள்சிங், பங்கஜ் ஆகிய ஐந்து பேரின் வீடுகள் முற்றிலும் எரிந்து சேதம் ஆனது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நாசமானதால் தங்க இடம் இல்லாமல் அவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


கோவை: வால்பாறை அருகே நல்லாகாத்து எஸ்டேட் உள்ளது. இங்கு சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எஸ்டேட் நிர்வாகத்தின் தரப்பில் கட்டி தரப்பட்டுள்ள குடியிருப்பு பகுதியில் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை சுமார் 9 மணி அளவில் நல்லாகாத்து இரண்டாவது டிவிஷனில் வீட்டில் லேசான தீ எரிந்து உள்ளது.எஸ்டேட் மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



எஸ்டேட் நிர்வாகம் எஸ்டேட் வாகனத்தின் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 5 வீடுகள் முற்றிலும் சேதமானது. ரங்கநாயகி, மணியம்மாள், ராமலட்சுமி, மங்கள்சிங், பங்கஜ் ஆகிய ஐந்து பேரின் வீடுகள் முற்றிலும் தீயிற்கு சேதம் ஆனது.

வீட்டில் வைத்திருந்த டிவி, பீரோ, துணிமணி, நகைகள் மற்றும் வீட்டு உபகரண பொருட்கள் அனைத்தும் தீயினால் சேதம் அடைந்தது. இந்த தீ விபத்து பற்றி வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



வால்பாறை பகுதியில் சுமார் 75 ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகள் உள்ளதாகவும், குடியிருப்பில் தற்போது பராமரிப்பு இன்றி வருவதாகவும், இதனால் எஸ்டேட் வீடுகள் ஆங்காங்கே தீப்பற்றி எரிந்து சேதம் அடைவதாகவும் மக்கள் தெருவித்தனர்.

சுமார் 56 எஸ்டேட் பகுதிகளுக்கும், வால்பாறை மையப்பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனம் செல்வதற்கு சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் ஆகிறது. இதனால் தீ சில சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராமல் முற்றிலும் சேதம் அடைகிறது என்பதால் எஸ்டேட் நிர்வாகமே ஒவ்வொரு எஸ்டேட்டுக்கும் தீயணைப்பு வாகனங்கள் வைக்குமாறும், தீ தடுக்கும் உபகரணங்கள் வைக்கும்படியாகவும் தொழிற்சங்க தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...