சிசு பராமரிப்பு குவிஸ் போட்டியில் கேஎம்சிஎச் குழு தேசிய சாம்பியன்

தேசிய சிசு மன்றம் சார்பில் இந்துாரில் நடந்த தேசிய கருத்தரங்கில், நடந்த வினாடி வினா போட்டியில் கேஎம்சிஎச் மருத்துவர்கள் வி.பவித்ரா, என்.பிரதீபா குழுவினர் சாம்பியன் வெற்றி பெற்றனர்.

பிறந்த சிசுக்களை கவனிப்பதில் செவிலியர்களின் பங்கு மகத்தானது. உலகெங்கிலும் சிசு தீவிர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றும் செவிலியர்கள் கவனிப்பு தான் மிக மிக முக்கியமானது. மிகவும் உயர்தரமான கவனிப்பு என்பது குழந்தையின் நலன் பற்றி அறிய நன்குபடித்த செவிலியரால் மட்டுமே முடியும்.

சிசு பராமரிப்பு, மருத்துவம் பற்றி செவிலியர்களின் திறனை பரிசோதிக்க தேசிய அளவல் ஒரு வினாடி வினா நிகழ்ச்சி இந்துாரில் நடைபெற்றது. இதில், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை, தரமான சிசு பராமரிப்பு தரும் மருத்துவமனைகளுள் ஒன்று என நிருபித்துள்ளது.



சிசு பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் ஏ.ஆர்.சீனிவாசன், மருத்துவர் ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து வகுப்புகளை நடத்தி, இத்தகைய வெற்றி பெற செவிலியருக்குகற்றுக் கொடுத்துள்ளனர்.

தேசிய சிசு பராமரிப்பு மன்றம் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவில் சிசு பராமரிப்பு பற்றிய குவிஸ் போட்டியை நடத்தி வருகிறது. சிசு பராமரிப்பில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் இப்போட்டியில் பங்கேற்று தங்களது அறிவுத்திறனை மேம்படுத்தி வருகின்றனர். இது பல்வேறு கட்ட போட்டிகளாக நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்ட போட்டிகள் கோவையிலும், மண்டல அளவிலான போட்டிகள் சென்னையிலும் நடந்தன. இதில், வி.பவித்ரா மற்றும் என்.பிரதிபா ஆகியோர் போட்டியில் பங்கேற்றதோடு, இந்துாரில் நடந்த தேசிய அளவிலான சிசு பராமரிப்பு கருத்தரங்கையொட்டி நடந்த தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றுள்ளனர்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறது. சென்ற ஆண்டும் இறுதிப்போட்டியில் 3-வது பரிசை வென்றது. இந்த ஆண்டு முதல் பரிசை பெற்று, தேசிய அளவில் சாம்பியன் பட்டத்தை பெற்று தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...