கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஒரே இடத்தில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம்

சிறப்பு தொழுகை முடித்து வெளியே வந்தவர்களிடம், ஆயிஷா மஹாலின் வலது புறம் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியும், இடதுபுறம் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் அப்புசாமியும் வெள்ளை தொப்பி அணிந்து வாக்கு சேகரித்தனர்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் கோவையில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று ஏப்ரல்.10 ஒரே இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



அதன்படி ரமலான் பண்டிகையை முன்னிட்டு கோவை ஆத்துப்பாலம் ஆயிஷா மஹாலில் ரமலான் சிறப்பு தொழுகைக்கு இன்று ஏப்ரல்.10 ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று விட்டு வெளியே வந்த பொழுது, அவ்வழியாக வந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் அப்புசாமி இருவரும் வாக்கு சேகரிக்க ஆரம்பித்தனர்.



ஆயிஷா மஹாலின் வலது புறம் ஈஸ்வரசாமியும், இடதுபுறம் கார்த்திகேயன் அப்புசாமியும் வெள்ளை தொப்பி அணிந்து வாக்கு சேகரிக்க ஆரம்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...