திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி இன்று துவங்கியது. இவற்றை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி இன்று துவங்கியது.

திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



தொடர்ந்து திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 13 பேரின் பெயர், சின்னங்கள் மற்றும் நோட்டா என 14 சின்னங்கள் பொருத்தும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...